Skip to Content

Languages

ஒரு எண்ண இயக்கம்

"நாடு என்பது சில ஆண்களை கொண்ட குழுவோ அல்லது ஒரு  கூட்டமோ  அல்ல, புவியியல் பகுதி மற்றும் கால அளவு கொண்ட ஒரு சமூகம் நாடு என்று அறியப்படும்  தகுதி பெறுவதில்லை. இதை அடிபடையாக கொண்டு உருவாக்கிய ஒரு அரசை வேண்டுமானால் மாநிலம் என்று சொல்லலாம், நாடு என்று சொல்வதற்கில்லை.  ஒரு பொதுவான நோக்கம் அல்லது  இலக்கை கொண்டது மட்டுமே ஒரு தேசமெனப்படும். எல்லா ப்ரஜைகளும் சேர்ந்து ஒரு புனிதமானதிற்காக, உத்தமமானதிற்காக முயல்வர். ஆன்மீகத்தை ஒட்டிய சேவையின் விளைவு மட்டுமே மனிதனை உருவாக்கும், மனிதனை உருவாக்குவது தேசத்தை உருவாக்குவதில் மாற்றமின்றி மற்றும் பிரிவின்றி தொடர்புடையதாகும். " இதுவே விவேகானந்த கேந்திரத்தின் பின்னணியில் உள்ள நமது நோக்கதின் முக்கிய கருவாக உள்ளது.Thought Movment

சுவாமி விவேகானந்தர்,  தாய்நாட்டின் மீது மனதில் ஆழ்ந்த அன்பு கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். அவர் கன்னியாகுமரி வந்து கடலின் நடுப்பகுதியில் உள்ள பாறை  மீது, 25 26 மற்றும் 27 டிசம்பர் 1892ல் அமர்ந்து இந்தியாவின் கடந்த கால, நடப்பு மற்றும் வருங்காலத்தை பற்றி தியானம் செய்தார். இந்த பாறையில் தான் அவர் ஒளிமயமான இந்தியாவின் குறிகோளை கண்டறிந்தார், பின்னர் இந்தியாவின் ஆன்மீகத்தால் உலகையே  அதிரச்செய்தார். இந்த புனித இடத்தில் மறை.திரு.ஏக்னாத்ஜி ரானடே, பல கோடி இந்திய மக்கள் உதவியுடன் விவேகானந்த நினைவு பாறையை நிறுவினார், அது சுவாமி விவேகானந்தர் தியானதில் கண்ட இந்தியாவின் உன்னத குறிக்கோளின் சின்னமாக  விளங்குகிறது .

இந்த நினைவு சின்னத்தோடு, திரு.ஏக்னாத்ஜி ரானடே சுவாமி விவேகானந்தர் தியானத்தில் கண்ட இந்தியாவின் உன்னத குறிக்கோளின் முன்னோடியாக விவேகானந்த கேந்திரமெனும் ஆன்மீகத்தை ஒட்டிய சேவை நிறுவனத்தை நிறுவினார். அது சுவாமி விவேகானந்தர்  தொலைநோக்கிய உன்னத இந்தியாவின் செயல் சின்னமாக  விளங்குகிறது . விவேகானந்த கேந்திரம் தேச சேவைக்காக தன்னை அற்பணிக்க தயாராக இருக்கும் இளைஞர்-யுவதிகளை அறைகூவி அழைக்கிறது.

Thought of the Day

— Swami Vivekananda

Complete works of Swami Vivekananda

Vivekananda Kendra Updates

Stay informed on our latest news!

4 + 7 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.
Syndicate content